முகப்பு
தமிழ்நாடு

‘ஜல்லிக்கட்டு போட்டிகள் கண்டிப்பாக நடைபெறும்’: அமைச்சர் மூர்த்தி

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி திங்கள்கிழமை தெரிவித்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:05 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி திங்கள்கிழமை தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் நிகழ் ஆண்டு ஜனவரி 14-இல் அவனியாபுரம், 15-ஆம் தேதி பாலமேடு, 16-ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்கான முன்ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கால்நடை மருத்துவமனைகளில், ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு உடல் தகுதிச் சான்று வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், நிகழ் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என ஏற்கனவே அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:

கரோனா விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் கண்டிப்பாக நடைபெறும். போட்டிகள் நடத்துவதற்கான கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை இன்று முதல்வர் வெளியிடுவார்.

அதனைத் தொடர்ந்து போட்டிக்கான ஏற்பாடுகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →