தமிழ்நாடு

கம்பத்தில் கோமாதா பூஜை

DIN

தேனி மாவட்டம் கம்பம் நவநீதகிருஷ்ண யாதவ மடாலய வளாகத்தில் உள்ள ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் மார்கழி 1ம் தேதி முதல் நாள்தோறும் அதிகாலையில் பஜனை மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 

அதன்படி மார்கழி 28 ஆம் நாளான புதன்கிழமை அதிகாலை கோமாதா பூஜை நடைபெற்றது. பூஜையையொட்டி  திருப்பாவையில் உள்ள 28வது பாடலான கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம் என்று துவங்கும் திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்தனர். பின்னர்  ஸ்ரீ வேணுகோபாலகிருஷ்ணனுக்கு  சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 

முன்னதாக  கோவில் வளாகத்திற்குக் கொண்டு வரப்பட்ட பசு மற்றும் கன்றுக்குட்டிக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, மாலை சூட்டி, அலங்காரம் செய்து, பூஜை  நடந்தது. இதில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

SCROLL FOR NEXT