ஆசனூர் பழங்குடியின குடியிருப்பு மாட்டுத்தொழுவத்தில் கண்டெடுக்கப்பட்ட சிறுத்தை குட்டி. 
தமிழ்நாடு

ஆசனூர் பழங்குடியின குடியிருப்பு மாட்டுத்தொழுவத்தில் சிறுத்தை குட்டி கண்டெடுப்பு

ஆசனூர் அடுத்த பங்களாதொட்டியில் பழங்குடியினர் குடியிருப்பு மாட்டுத்தொழுவத்தில் சிறுத்தை குட்டி சேர்வுடன் படுத்திகிடப்பதை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

DIN

ஆசனூர் அடுத்த பங்களாதொட்டியில் பழங்குடியினர் குடியிருப்பு மாட்டுத்தொழுவத்தில் சிறுத்தை குட்டி சேர்வுடன் படுத்திகிடப்பதை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் சிறுத்தைகள் அதிகளவில் உள்ளன. அடர்ந்த காட்டுப்பகுதியில் வாழும் சிறுத்தைகள் அடிக்கடி கால்நடைகளை வேட்டையாடி வருகின்றன.

இந்நிலையில், ஆசனூர் அடுத்த பங்களாதொட்டியில் பழங்குடியினர் ஆடு,மாடுகள் வளர்த்து வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல மாடுகளை பராமரிக்க சென்றபோது மாட்டுப்பட்டியில் சிறுத்தை குட்டி சேர்வுடன் படுத்திகிடப்பதை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிக்க | 
‘10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்பை தவிர்க்க வேண்டும்’: சென்னை உயர்நீதிமன்றம்

அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை குட்டியை மீட்டு பரிசோதனை செய்ததில் 3 மாதமான பெண் சிறுத்தை குட்டி என்பது தெரியவந்தது.

அதனை பத்திரமாக மீட்டு ஆசனூர் வனஅலுவலகத்தில் உள்ள கூண்டில் வைத்து டாக்டர் அசோகன் பரிசோதனை செய்ததில் சிறுத்தைகுட்டி சேர்வுடன் இருப்பது தெரியவந்தது.   அதற்கு மருத்துக்குழுவினர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.  

சிறுத்தைகுட்டி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டவுடன் அதனை மீண்டும் தாயிடம் சேர்க்க முயற்சி எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள்வி

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி

வேளாங்கண்ணிக்கு திரளானோா் பாத யாத்திரை

காரைக்கால் கோயிலில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு

SCROLL FOR NEXT