தமிழ்நாடு

அவிநாசி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலி

அவினாசி அருகே கரையைப்பாளையத்தில் குட்டையில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

DIN

அவினாசி அருகே கரையைப்பாளையத்தில் குட்டையில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் நம்பியாம்பாளையம் அருகே கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் மகன் மதன்குமார் (11). அவிநாசி அருகே ராக்கியாபாளையம் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். 

கரைப்பாளையம் தனியாருக்குச் சொந்தமான குட்டையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மதன்குமார் நீரில் மூழ்கியுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறை வீரர்கள் நீரில் மூழ்கிய சிறுவனை மீட்க முயன்றனர். இருப்பினும் சிறுவன் மதன்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதையடுத்து மதன்குமார் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

SCROLL FOR NEXT