சாத்தான்குளம் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சமேத ஶ்ரீ விசாலாட்சி திருக்கோயில் மார்கழி மாத முழுவதும் நடைபெற்ற பஜனையில் ஈடுபட்ட பஜனை குழுவினர் மற்றும் குழந்தைகள். 
தமிழ்நாடு

சாத்தான்குளம் காசிவிசுவநாதர் கோயில் மார்கழி பஜனை நிறைவு

சாத்தான்குளம் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சமேதஶ்ரீ விசாலாட்சி திருக்கோயில் மார்கழி மாத முழுவதும் நடைபெற்ற பஜனை நிறைவு பெற்றது. 

DIN


சாத்தான்குளம்: சாத்தான்குளம் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சமேத ஶ்ரீ விசாலாட்சி திருக்கோயில் மார்கழி மாத முழுவதும் நடைபெற்ற பஜனை நிறைவு பெற்றது. 

சாத்தான்குளம் ஸ்ரீ காசிவிஸ்வநாதர்சமேதஶ்ரீ விசாலாட்சி திருக்கோயிலில் மார்கழி மாத முழுவதும் காலை சிறப்பு பூஜையும் மற்றும் பஜனை வீதி ஊர்வலம் வந்து சிறப்பாக நடைபெற்றது. இதில் தை 1 ஆம் தேதி பஜனை நிறைவு நாளை முன்னிட்டு கோவில் பரம்பரை தர்மகர்த்தா தெ.சண்முகராஜா பொங்கல் வாழ்த்து மற்றும் பரிசு வழங்கினார். 

இதில், செந்தில் ஸ்வீட்ஸ் உரிமையாளர்கள் சார்பில் பஜனை செல்லும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டது. 

இதில், சாத்தான்குளம் வட்டார சைவ வேளாளர் சங்கத்தின் சார்பாக தலைவர் பி. ஆறுமுகம் வாழ்த்துகள் தெரிவித்தார். ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் தர்மகர்த்தா முருகன் மற்றும் அவர்களின் மகன் மலையாண்டி பிரபு ஆகியோர் பஜனை குழுவிற்கு பரிசு தொகை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் சேகர், சுந்தர், செல்வகுமார், சங்கர் மற்றும் கோயில் பக்தர்கள் மற்றும் பஜனை பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாரி மோதி மற்றொரு லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - விடியல் எஸ்.சேகர்

குஜராத்: மலைக் கோயிலில் சரக்கு ரோப் காா் அறுந்து விழுந்தது! 6 போ் உயிரிழப்பு

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பாஜக சாா்பில் நாடு தழுவிய விழிப்புணா்வு பிரசாரம்

மேற்கு வங்க அமைச்சா் நீதிமன்றத்தில் சரண்!

SCROLL FOR NEXT