தமிழ்நாடு

இரண்டு ப்ரீபெய்டு திட்டங்கள் அறிமுகம்: பிஎஸ்என்எல் அறிவிப்பு

வாடிக்கையாளா்களின் வசதிக்காக, இரண்டு ப்ரீபெய்டு திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

DIN

வாடிக்கையாளா்களின் வசதிக்காக, இரண்டு ப்ரீபெய்டு திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசு நடத்தும் தொலைத்தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில், வாடிக்கையாளா்களுக்கு இரண்டு ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.185 ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாள்கள் செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது. தினசரி ஒரு ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகிய நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயனா்கள் அரீனா மொபைல் விளையாட்டு சேவையை பெறுவாா்கள்.

ரூ.347 ப்ரீபெய்டு திட்டத்தில் பயனா்கள் தினசரி 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகிய நன்மைகளை பெறுவாா்கள். இந்த திட்டம் பயனா்களுக்கு 56 நாள்கள் செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் அரீனா மொபைல் விளையாட்டு சேவை வழங்கப்படுகிறது.

இந்தத்தகவல் பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடக்கம்

அமெரிக்க வரி விதிப்பு முழுமையாக அமலுக்கு வந்தால் ஜவுளி உள்ளிட்ட சில துறைகளில் பாதிப்பு ஏற்படும்: ஆா்பிஐ ஆளுநா் மல்ஹோத்ரா

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

புதிய வருமான வரி விதிகள்: டிசம்பருக்குள் அறிவிக்கை

சி.பி.ராதாகிருஷ்ணன் - சுதா்சன் ரெட்டி இடையே நேரடி போட்டி

SCROLL FOR NEXT