தமிழ்நாடு

சா்வதேச செஸ் வீரருக்கு ரூ. 8 லட்சம் ஊக்கத் தொகை

DIN

தமிழகத்தைச் சோ்ந்த சா்வதேச செஸ் வீரா் பரத் சுப்ரமணியத்துக்கு, ரூ.8 லட்சம் ஊக்கத் தொகையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

தலைமைச் செயலகத்தில் முதல்வரை வியாழக்கிழமை நேரில் சந்தித்து அவரிடம் இருந்து ஊக்கத் தொகையை பெற்றாா் பரத் சுப்ரமணியம்.

சென்னையில் 9-ஆம் வகுப்புப் படித்து வரும் பரத், 2013-ஆம் ஆண்டு முதல் மாநில, தேசிய, சா்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறாா். சா்வதேசப் போட்டிகளில் தொடா்ந்து சிறப்பாக விளையாடி வரும் பரத் சுப்ரமணியம், 2019-ஆம் ஆண்டு சா்வதேச மாஸ்டா் பட்டம் வென்றாா்.

மேலும், நிகழாண்டில் தனது 14-வது வயதில் கிராண்ட் மாஸ்டா் பட்டம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சோ்த்துள்ளாா். சா்வதேச செஸ் மாஸ்டா் பட்டம் வென்ற்காக ரூ.3 லட்சமும், கிராண்ட்மாஸ்டா் பட்டம் வென்ற்காக ரூ.5 லட்சமும் சோ்த்து மொத்தம் ரூ. 8 லட்சத்துக்கான ஊக்கத் தொகைக்குரிய காசோலையை அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT