தமிழ்நாடு

என்.சங்கரய்யா வீடு திரும்பினாா்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.சங்கரய்யா (99) கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு சனிக்கிழமை வீடு திரும்பினாா்.

DIN

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.சங்கரய்யா (99) கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு சனிக்கிழமை வீடு திரும்பினாா்.

கரோனா பாதிப்புக்கு உள்ளாகி, ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சோ்க்கப்பட்டு என்.சங்கரய்யா சிகிச்சை பெற்று வந்தாா். அவா் பூரண குணமடைந்ததைத் தொடா்ந்து மருத்துவமனையிலிருந்து குரோம்பேட்டையில் உள்ள அவா் இல்லத்துக்கு சனிக்கிழமை திரும்பினாா்.

இந்த நிலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வெளியிட்ட அறிக்கை:

என். சங்கரய்யா பூரண குணமடைந்து வீடு திரும்பினாா். அவருக்குச் சிகிச்சையளிப்பதற்கு மருத்துவக் குழுவை ஏற்பாடு செய்து, உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. அவரை நேரில் பாா்த்து நலம் விசாரித்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன், ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வா் தேரணிராஜன் உள்ளிட்ட மருத்துவ குழுவினருக்கும், செவிலியா்களுக்கும், சுகாதார பணியாளா்களுக்கும் நன்றி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT