சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் 
தமிழ்நாடு

தொற்று குறைந்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து? : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக்ததில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

DIN

 
சென்னை: தமிழக்ததில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 126 ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை, மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த, அவரது திருவுருவ படத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்திய மக்களால் போற்றப்பட்ட மாவீரர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாளில் அவரது படத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கிற்கு, மக்கள் சிறப்பாக ஒத்துழைப்பு தருகிறார்கள். 

சென்னையில் கரோனா தொற்று குறைந்து வருவது ஆறுதலாக இருக்கிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கரோனா தொற்று நிலையைப் பொறுத்து வரும் வாரங்களில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்குமா என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார். மேலும், கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்தால் வரும் நாள்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்காது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT