தமிழ்நாடு

மொழிப்போர் தியாகிகளால் தமிழினம் மேன்மை அடைந்தது: மு.க.ஸ்டாலின்

DIN

மொழிப்போர் தியாகிகளால் தமிழினம் மேன்மை அடைந்ததுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், மொழிப்போர் தியாகிகளின் தியாகம்தான் எங்களை உயிர்ப்போடு வைத்துள்ளதாகவும் அவர் பேசினார். 

திமுக மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின்,

1938-ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போர் வெப்பம்தான் 2022-ஆம் ஆண்டு வரை நீடித்து வருகிறது. அந்த ஆண்டு மொழிப்போரில் ஏராளமான பெண்களும் போடாடினார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட தாளமுத்து நடராசன் நினைவாக அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழுக்காக போராடி பல்வேறு கொடுமைகளை அனுபவித்து உயிர் நீத்தவர் நடராசன்.

மொழிப்போர் தியாகிகளின் நினைவாக பாலங்கள், மணிமண்டபங்கள், சாலைகள் அமைக்கப்படும். தமிழ் மொழிக்காக பேரறிஞர் அண்ணா போன்ற இளைஞர்கள் ஒன்றுகூடினார்கள்.

தமிழ் மொழிக்காகவும், தமிழ் மக்களின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழினத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம்.

தமிழ் மொழியில் பயின்ற மாணவர்களுக்காக தொழில் படிப்புகளில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT