தாக்கப்பட்ட நாகை மீனவர்கள். 
தமிழ்நாடு

நாகை மீனவர்கள் 4 பேர் மீது தாக்குதல்: இலங்கை மர்ம நபர்கள் அட்டூழியம்

கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 4 பேரை இலங்கைச் சேர்ந்த மர்ம நபர்கள் தாக்கி, அரிவாளால் வெட்டியுள்ளனர்.

DIN


வேதாரண்யம்: கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 4 பேரை இலங்கைச் சேர்ந்த மர்ம நபர்கள் தாக்கி, அரிவாளால் வெட்டியுள்ளனர்.

பாதிப்படைந்த மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

நாகை ஆரியநாட்டுத் தெருவைச் சேர்ந்த மணிவண்ணன், வசந்தபாலன், நிர்மல் உள்ளிட்ட 4 பேர் திங்கள்கிழமை கடலுக்குள் சென்றனர்.தூண்டில் போட்டு மீன்பிடிக்கும் இந்த மீனவர்கள் கடலில் செவ்வாய்க்கிழமை மாலை மீன்பிடித்துள்ளனர்.

 அப்போது ஒரு படகில் வந்த இலங்கையச் சேர்ந்த சிலர் மீனர்களை தாக்கி, அரிவாளால் வெட்டியுள்ளனர்.பின்னர் உடமைகளை பறித்துக்கொண்டு சென்றுள்ளனர்.

பலத்த காயமடைந்த 4 பேரும் வேதாரண்யம் மருத்தவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மற்றும் நாகை மருத்தவக்கல்லூரி மருத்தவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

SCROLL FOR NEXT