தமிழ்நாடு

அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனின் கட்சிப் பதவி பறிப்பு

அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் பொறுப்பிலிருந்து நவநீதகிருஷ்ணன் எம்.பி. விடுவிக்கப்படுவதாக கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

DIN

அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் பொறுப்பிலிருந்து நவநீதகிருஷ்ணன் எம்.பி. விடுவிக்கப்படுவதாக கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலர் பொறுப்பில் இருக்கும் நவநீதகிருஷ்ணன் எம்.பி.(தென் சென்னை தெற்கு(கிழக்கு) மாவட்டம் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

முன்னதாக திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன் இல்லத் திருமண விழாவில் நேற்று பங்கேற்ற நவநீதகிருஷ்ணன், கனிமொழி உள்ளிட்டோரை பாராட்டி பேசினார். மாநிலங்களவையில் தான் எப்படி பேசவேண்டும் என பல விஷயங்களை தனக்கு கற்றுக் கொடுத்தவர் கனிமொழி, டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர்தான் என அவர் தெரிவித்திருந்தார்.

இவ்நிகழ்வைத் தொடர்ந்து நவநீதகிருஷ்ணனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT