தமிழ்நாடு

நவநீதகிருஷ்ணன் பதவி பறிப்பு ஏன்? ஜெயக்குமார் விளக்கம்

DIN

அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பதவி பறிக்கப்பட்டது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்களித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் வியூங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. 

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு மக்கள் மகத்தான வெற்றியை பரிசளிப்பர். திமுக அரசு கடந்த 8 மாதங்களில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. எங்களுடன் இருந்தால்தான் கூட்டணி கட்சிகளுக்கு லாபம்; இல்லாவிடில் அவர்களுக்குதான் நஷ்டம். 
கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அறிவாலயத்துக்கே சென்று திமுக எம்பியை பாராட்டி பேசுவதை எப்படி அனுமதிக்க முடியும். எனவே உரிய நடவடிக்கை உரிய நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. நவநீதிகிருஷ்ணன் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்த நினைக்கும் யாராக இருந்தாலும் இதுபோன்ற நடவடிக்கை தொடரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

SCROLL FOR NEXT