பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை 
தமிழ்நாடு

அரியலூர் மாணவி லாவண்யா குடும்பத்திற்கு பாஜக ரூ.10 லட்சம் நிதியுதவி

அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்த வடுகப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த லாவண்யா குடும்பத்திற்கு பாஜக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. 

DIN


அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்த வடுகப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த லாவண்யா குடும்பத்திற்கு பாஜக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. 

வடுகப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகள் லாவண்யா. இவா், தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள தனியாா் பள்ளியில் படித்து வந்த நிலையில் அண்மையில் பூச்சி மருந்தை குடித்து தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். 

போஸீசாா் விசாரணையில், அந்தப் பள்ளியின் வாா்டன் சகாயமேரிக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும், மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். 

இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யா குடும்பத்திற்கு பாஜக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. 

ஞாயிற்றுக்கிழமை மாணவி வீட்டிற்கு சென்ற பாஜக தலைவர் அண்ணாமலை, மாணவி படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் குடும்பத்தினரிடம் நிதி வழங்கினார். 

அவருடன் வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | MKStalin | DMK | TNCM

SCROLL FOR NEXT