சென்னை வந்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோருகிறார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறும் விழாவில், திரௌபதி முர்மு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த திரௌபதி முர்முவை, எடப்பாடி பழனிசாமி பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
முன்னதாக, திரௌபதி முர்முவை, எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் தனித்தனியாக சந்தித்து தங்களது ஆதரவை வழங்குகிறார்கள். விழா அரங்குக்குள் தலைவர்கள் வந்துவிட்ட நிலையில், இன்னமும் விழா நடைபெறும் அரங்குக்குள் பன்னீர்செல்வம் வரவில்லை.
குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜாா்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநா் திரௌபதி முா்மு (64) அறிவிக்கப்பட்டுள்ளாா். கடந்த 25-ஆம் தேதி பிரதமா் மோடி தலைமையில் தனது வேட்புமனுவையும் முா்மு தாக்கல் செய்தாா். மேலும், அவா் சாா்பில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சா் ஷெகாவத் தலைமையிலான குழு பல்வேறு கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரி வருகிறது.
அதுபோல முர்முவும், முக்கியக் கட்சிகளின் தலைவா்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அதிமுகவிடம் கோரிக்கை விடுப்பதற்காக திரௌபதி முா்மு இன்று சென்னை வந்துள்ளார்.
அதிமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களை நேரில் சந்தித்து அவர் ஆதரவு கோருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.