தமிழ்நாடு

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தீ விபத்து: இருவர் பலி

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் கிடங்கில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இருவர் உயிரிழந்தனர்.

DIN


சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் கிடங்கில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இருவர் உயிரிழந்தனர்.

நிறுவனத்திற்கு தரை விரிப்பு போட வந்த கோபிநாத், சதீஷ் என்ற இரண்டு பேர் உயிர் இழப்பு. தரைவிரிப்பு போட்டு முடித்துவிட்டு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்திலேயே தூங்கிய போது இன்று அதிகாலை 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் சரவணன் தலைமையில் எழும்பூர், வேப்பேரி, கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய 4 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு  வீரர்கள் அரை மணி நேரம் போராடி  தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருவரும் உயிரிழந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல். இது தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்! 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது!

வழுக்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்!

தரவுகளால் வரலாற்றை கட்டமைப்போம்! - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவா்

அனுமதியின்றி மது விற்றவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT