தமிழ்நாடு

நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை: தமிழக அரசு 

DIN

சென்னை: நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் கடைகளில் ஊக்கத்தொகை - அரசு அறிவிப்பு காதி பொருட்கள், பனைவெல்லம் போன்ற கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்யும் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் சில நிபந்தனைகளுடன் ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. 

 இதன்படி, ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் எனவும் கிராமப்புறத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் எனவும் நகர்ப்புற நியாயவிலை கடைகளில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை பூர்த்தி செய்யும் விற்பனையாளர்களுக்கு, அம்மாதம் செலுத்தப்படும் விற்பனை தொகையில் 1 சதவீதம் ஊக்கத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் நியாய விலை கடை நடத்தும் கூட்டுறவு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT