மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்துவதற்காக ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர். 
தமிழ்நாடு

மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்த ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றம்: விரைவில் தூர்வாரும் பணி

மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்த ஏரியிலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. தண்ணீர் முழுமையாக வெளியேறிதும் ஒவ்வொரு பகுதியாக தூர்வாரும் பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொள்ள உள்ளனர். 

DIN

மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்த ஏரியிலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. தண்ணீர் முழுமையாக வெளியேறிதும் ஒவ்வொரு பகுதியாக தூர்வாரும் பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொள்ள உள்ளனர். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்களின் சுமார் 30 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த ஏரியை தூர்வாரவும், ஏரிக்கரையை மேம்படுத்தவும் மற்றும் உபரி நீர் மதகுகளை பழுது பார்க்கவும் ரூ.20 கோடி நிதி ஒதுக்கி இருந்தது. இதற்கான பணியை கடந்த மாதம் ஆறாம் தேதி சிறு குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார். அதற்கான பணி தற்போது நடந்து வருகிறது.

ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்ற பொதுப்பணித் துறையினர் உபரி நீர் வெளியாகும் கரையினை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்து தண்ணீர் வெளியேற வழிசெய்து அதன் வழியாக தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இன்னும் சில நாள்களில் தினங்களில் ஏரியில் இருந்து முழுமையாக தண்ணீர் வெளியேறிவிடும். அதன்பிறகு ஏரியை நான்கு பிரிவுகளாக பிரித்து அதன் பிறகு ஒவ்வொரு பகுதியாக தூர்வாரும் பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொள்ள உள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்: மாநகராட்சி ஆணையரிடம் வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

SCROLL FOR NEXT