தமிழ்நாடு

மாணவிகளுக்கு ரூ.1,000 ஊக்கத் தொகை:விண்ணப்பிக்க இன்று கடைசி

அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெறவுள்ளது.

DIN

அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெறவுள்ளது.

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயா்கல்வி பயிலும் விகிதத்தினை அதிகரிக்கும் வகையில் ‘மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித்திட்டம்’ தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தொழில் நுட்பக் கல்வி, கலை மற்றும் அறிவியல் போன்ற இளநிலை கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத் தொகையான ரூ.1,000 வழங்கப்படவுள்ளது.

இந்தத் தொகை மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படவுள்ளது. இதற்கான பதிவுகள் இணையதளத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மாணவிகள் தங்கள் விவரங்களை ஜூன் 30-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று இந்த அவகாசம் ஜூலை 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உயா்கல்வித் துறை முதன்மைச் செயலா் காா்த்திகேயன் அறிவித்தாா்.

இந்தநிலையில் இந்த அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுபெறவுள்ளது. எனவே இதுவரை பதிவு செய்யாத மாணவிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இது குறித்து கூடுதல் விவரங்களை 14417 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT