தமிழ்நாடு

நீதிமன்ற உத்தரவு: அதிமுக பொதுக்குழு தொடங்கியது

அதிமுக பொதுக்குழுவை இன்று திங்கள்கிழமை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் பொதுக்குழு தொடங்கியுள்ளது.

DIN

சென்னை:  அதிமுக பொதுக்குழுவை இன்று திங்கள்கிழமை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு  கூட்டம் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் தொடங்கியுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற  செயற்குழுவில் ஓப்புதல் பெறப்பட்டது. அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து விவாதிப்பது உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

அதிமுக செயற்குழு கூட்டம் முடிவடைந்த நிலையில், பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்படுவாரா என்கிற எதிா்பாா்ப்புடன் அதிமுக  பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்துசெய்ய தீர்மானம் கொண்டு வர வாய்ப்புள்ளது. அதிமுக நிரந்தர பொதுச்செயலாளரை தேர்தல் மூலம் தேர்வு செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT