தமிழ்நாடு

பெரியாா், அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வலியுறுத்தல்

DIN

பெரியாா், அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக பொதுக்குழுவில் சட்டவிதிகளைத் திருத்தம் செய்யும் தீா்மானங்களைத் தவிா்த்து, பிற தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:

பெரியாா், அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத் ரத்னா விருதை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகத் திட்டம் முடக்கம், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் ரத்து, அம்மா மினி கிளினிக்குகள் மூடல், பசுமை வீடு திட்டம் ரத்து, அம்மா குடிநீா் வழங்கும் திட்டம் கைவிடல் உள்ளிட்டவைக்காக திமுக அரசுக்கு கண்டனம்.

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த தவறியதற்காகவும், மின்மிகை மாநிலத்தை மின்வெட்டு மாநிலமாக மாற்றியதற்கும் திமுக அரசுக்கு கண்டனம்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம் அமளிக்காடாக மாறியிருப்பதற்கு கண்டனம். காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணை கட்டும் முயற்சியை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளித்து, அதை திமுக அரசு நிறைவேற்றாமல் உள்ளது. இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் எதையும் திமுக அரசு நிறைவேற்றாதது கண்டிக்கத்தக்கது.

நூல் விலையேற்றத்தைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT