தமிழ்நாடு

அதிமுக அலுவலக கலவரம்: 3 தனிப் படைகள் அமைப்பு

அதிமுக அலுவலகத்திற்கு வெளியே ஏற்பட்ட கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

DIN


அதிமுக அலுவலகத்திற்கு வெளியே ஏற்பட்ட கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று காலை ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பொதுமக்களின் வாகனங்கள் மீது ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்த வருவாய்த் துறையினர், தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

இரு தரப்பினரும் அளித்த புகாரின் அடிப்படையில் 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கலவரத்தில் ஈடுபட்ட 400 பேர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விடியோ காட்சிகளை ஆராய்ந்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்காக மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் தலைமையில் மூன்று தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

SCROLL FOR NEXT