மண்சரிவு ஏற்பட்ட லோயர்கேம்ப் குமுளி மலைச்சாலை. 
தமிழ்நாடு

குமுளி மலைச்சாலையில் மண் சரிவு

தேனி மாவட்டம், லோயர் கேம்ப் குமுளி மலைச்சாலையில் புதன்கிழமை மண் சரிவு ஏற்பட்டது.

DIN

கம்பம்: தேனி மாவட்டம், லோயர் கேம்ப் குமுளி மலைச்சாலையில் புதன்கிழமை மண் சரிவு ஏற்பட்டது.

தேனி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை லோயர் கேம்ப்பிலிருந்து குமுளி செல்லும் மலைப்பாதையில் இரச்சல் பாலம் அருகில் உள்ள கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் தமிழக கேரள வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

இது குறித்து குமுளி காவல் நிலைய போலீசார் கூறியது, தொடர் மழை காரணமாக லோயர் கேம்ப் குமுளி மலைச்சாலை கண்காணிக்கப்படுகிறது. மேலும், இது பற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையக அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். இரவு மலைப்பாதையில் ரோந்து பணி நடைபெறுகிறது என்றார். 

மண் சரிவை உடனே அகற்றி போக்குவரத்தை போலீசார் சீரமைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனாவின் உலகளாவிய ஏற்றுமதி அதிகரிப்பு! அமெரிக்க ஏற்றுமதி குறைவு!!

மகள் உயிருக்கு ஆபத்து! கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் பெற்றோர் கதறல்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

கிணறுக்குள் குதித்த பெண்! காப்பாற்றச் சென்ற தீயணைப்பு வீரர் உள்பட மூவர் பலி!!

இருமல் மருந்து விவகாரம்: சென்னையில் அமலாக்கத் துறை சோதனை

SCROLL FOR NEXT