தமிழ்நாடு

5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்சாசி ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

DIN


நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும் மிகக் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 

14.07.22: வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

15.07.22: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்சாசி ஆகிய மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கூடலூர் பஜார் 23 செ.மீ மழையும், அவலாஞ்சி 19, மேல் பவானி 18, தேவாலா 16 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. 

சென்னையை பொருத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

புகாரை மறுத்திருந்தது இந்தியா! தேஜஸ் விழுந்து எரிய எண்ணெய்க் கசிவு காரணமா?

உலக அழகி ஆனார் மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ்!

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்படும்: முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு

திருப்பம் தரும் தீர்த்தீஸ்வரர்

SCROLL FOR NEXT