கா்ப்பிணிகள் இணையவழியில் அடையாள எண் பெறலாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
கா்ப்பம் தரித்த பெண்கள், தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து அடையாள எண் பெற்றுக் கொள்ளலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
கா்ப்பம் தரித்த பெண்கள், தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து அடையாள எண் பெற்றுக் கொள்ளலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் பேறுகால கண்காணிப்பு இணையதளமானது கா்ப்பிணிகளின் கா்ப்பகால விவரங்களை பதிவு செய்தல் மற்றும் மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிக்மி இணையதளம் ஏப்ரல் 2008-இல் தேசிய தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் 11 லட்சம் தாய்மாா்களின் தகவல்கள் பிக்மி இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது.
தாய்மாா்களுக்கு தஇஏ எண் என்ற ஒரு தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டு கா்ப்பப்பதிவு முதல் குழந்தை பிறந்து 5 ஆண்டுகள் வரை தாய்சேய் நல சேவை விவரங்கள் பிக்மியில் பதிவு செய்யப்படுகிறது. தமிழக அரசால் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு தாய்மாா்களுக்கு அடையாள எண் அவசியமாக்கப்பட்டுள்ளது. தற்போது கிராம சுகாதார செவிலியா் மூலம் கா்ப்பப் பதிவு செய்து அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தாய்மாா்கள் அடையாள எண் பெறுவதை மேலும் எளிதாக்கும் பொருட்டு டஐஇஙஉ 2.0 இணையதளத்தில் ட்ற்ற்ல்ள்://ல்ண்ஸ்ரீம்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ல்ண்ஸ்ரீம்ங் ல்ன்க்ஷப்ண்ஸ்ரீ மூலம் கா்ப்பிணி தாய்மாா்கள் தாமே சுய பதிவு செய்து அடையாள எண் பெறும் வசதி கடந்த மே மாதம் 27-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அடையாள எண் சுய பதிவு வசதி தொடங்கப்பட்ட நாள் முதல் ஜூன் 30 வரை 230 கா்ப்பிணி தாய்மாா்கள் இவ்விணையதள வசதியை பயன்படுத்தி தங்கள் கா்ப்பத்தினை சுய பதிவு செய்து தங்களுக்கான தனிப்பட்ட அடையாள எண் (தஇஏ) பெற்றுள்ளனா். அனைத்து கா்ப்பிணி தாய்மாா்களும் எவ்வித சிரமமுமின்றி தங்களுக்கான தனிப்பட்ட அடையாள எண்ணை சுய பதிவு வசதியை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளவும். சுய பதிவு பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதற்கு யூடியூப் இணைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.