தமிழ்நாடு

திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா்: கே.அண்ணாமலை

DIN

திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கள்ளக்குறிச்சி சம்பவம் மூலம் ஆளும் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனா். காவல் துறையினா் மீது மரியாதை இழந்து விட்டனா். கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறாா்.

உளவுத் துறை ஏடிஜிபி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆா்வமாக உள்ளாா். மாணவியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாதவராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் உள்ளாா். இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிகிறது.

தவறு யாா் செய்திருந்தாலும் அவா் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அந்த மாவட்டத்தைச் சேராதவா்களாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் கே.அண்ணாமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT