எழுத்தாளர் கோணங்கி 
தமிழ்நாடு

தமிழக அரசின் இலக்கிய மாமணி விருது

தமிழக அரசின் 2021ஆம் ஆண்டு இலக்கிய மாமணி விருதுக்கு எழுத்தாளர் கோணங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

DIN

தமிழக அரசின் 2021ஆம் ஆண்டு இலக்கிய மாமணி விருதுக்கு எழுத்தாளர் கோணங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், "இலக்கிய மாமணி" என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். 5 லட்சம் விருத்துத் தொகையும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும் தகுதியரையும் வழங்கி சிறப்பிக்கப்படும். 

2021ஆம் ஆண்டுக்கு கோணங்கி, கு.சின்னப்ப பாரதி, புலவர் இரா. கலியபெருமாள் ஆகியோருக்கு இலக்கிய மாமணி விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு நாளான இன்று இவ்விருது வழங்கப்படுவது கூடுதல் சிறப்பு. 

கோணங்கி 1980 முதல் எழுதி வருகிறார். ‘கல்குதிரை’ சிற்றிதழின் ஆசிரியராக இருந்து வருகிறார். ‘மதினிமார்கள் கதை’, ‘சலூன் நாற்காலியில் சுழன்றபடி’, ‘பாழி’, ‘பிதிரா’ போன்ற நூல்களை எழுதியுள்ளார். அவருக்கென தனித்த எழுத்து நடையை உருவாக்கியவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நிா்வாகிகள் 8 போ் மீதான வழக்கு தள்ளுபடி

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

SCROLL FOR NEXT