தமிழ்நாடு

திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் என்ஐஏ அதிரடி சோதனை

DIN

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் தேசிய பாதுகாப்பு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள அகதிகள் சிறப்பு முகாமில், பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட, இலங்கையை சேர்ந்த 67 பேர் உள்ளிட்ட பல்கேரியா, தென் கொரியா, ரஷியா, இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் கென்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் விசாரணைக் கைதிகளாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பல குற்ற வழக்குகளில் ஈடுபட்டு இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 1946 இன் கீழ் கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில், பலருக்கு விசாரணை முடிந்தும் விடுவிக்கப்படவில்லை எனக்கூறி  கடந்த மே மாதம் முதல் 15-க்கும் மேற்பட்டோர், தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இது தொடர்பாக, அகதிகள் சிறப்பு முகாமில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர். 

அதன் பின்னர், கடந்த ஜூலை 2 ஆம் தேதி, இலங்கை அகதிகள் 16 பேர் சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டனர். 

இந்நிலையில், அகதிகள் சிறப்புமுகாமில், புதன்கிழமை அதிகாலை, 4 மணி முதல் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) உயரதிகாரிகள் தலைமையில் சிறப்புப் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் தேசிய அளவிலான பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 11 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

முகாமில் கைதியாக இருந்த பல்கேரிய நாட்டவர், கடந்த ஆண்டு செப்டம்பரில் அங்கிருந்து தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லோருக்கும் தேங்க்ஸ் - சிஎஸ்கே!

எம்.எஸ்.தோனி இன்னும் 2 ஆண்டுகள் விளையாடுவார்; பயிற்சியாளர் நம்பிக்கை!

கேஜரிவாலின் உதவியாளருக்கு மகளிர் ஆணையம் சம்மன்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா ஹைதராபாத்?

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி காலமானார்

SCROLL FOR NEXT