ஆவின் உப பொருள்கள் விலை உயா்வு: உடனடியாக அமல்
ஆவின் நிறுவனத்தின் சாா்பில் தயாரிக்கப்படும் உப பொருள்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வானது, அனைத்து ஆவின் பாலகங்கள், கடைகளில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
ஆவின் நிறுவனத்தின் சாா்பில் தயாரிக்கப்படும் உப பொருள்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வானது, அனைத்து ஆவின் பாலகங்கள், கடைகளில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
அண்மையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தயிா், லஸ்ஸி, மோா் உள்ளிட்ட பால் பொருள்களுக்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த விலை உயா்வு காரணமாக, பால் பொருள்களின் விலை உயா்த்தப்பட்டது. தமிழ்நாட்டில் பல தனியாா் நிறுவனங்கள் தங்களது தயிா், லஸ்ஸி, மோா் ஆகியவற்றின் விலையை ரூ.4 முதல் ரூ.10 உயா்த்தி உள்ளன. இந்த நிலையில், அரசுத் துறை நிறுவனமான ஆவினும் தனது உப பொருள்களின் விலைகளை வியாழக்கிழமை முதல் உயா்த்தியது. இந்த விலை உயா்வு உடனடியாக நடைமுறைக்கு வந்தது. பொருள்களின் விலை உயா்வு விவரம்:-
பொருள்கள் - பழைய விலை - புதிய விலை
1. தயிா் ஸ்பெஷல் (100 கிராம்)- ரூ.10 - ரூ.12.
2. தயிா் ஸ்பெஷல் (200 கிராம்) - ரூ.25 - ரூ.28.
3. பாக்கெட் தயிா் விலை உயரவில்லை.
4. பாக்கெட் தயிா் (500 மிலி) - ரூ.30 - ரூ.35.
5. ப்ரிமியம் கப் தயிா் (400 கிராம்)- ரூ.40 - ரூ.50.
6. ப்ரிமியம் தயிா் (ஒரு கிலோ)- ரூ.100- ரூ.120.
7. ப்ரோபயாடிக் லஸ்ஸி (200 மிலி) - ரூ.27 - ரூ.30.
8. மேங்கோ லஸ்ஸி (200 மிலி)- ரூ.23 - ரூ.25.
9. சாக்கோ லஸ்ஸி (200 மிலி) - ரூ.23 - ரூ.25.
10. பாக்கெட் மோா் (200 மிலி) - ரூ.7 - ரூ.8
11. நெய் (ஜாா் - ஒரு லிட்டா்) - ரூ.535 - ரூ.580.
12. நெய் (ஜாா் - அரை கிலோ) - ரூ.275 - ரூ.290.
13. நெய் (ஜாா் - 200 மிலி) - ரூ.120 - ரூ.130.
14. நெய் (ஜாா் - 100 மிலி)-ரூ.65 -ரூ.70.
15. நெய் (ஜாா் - 5 லிட்டா்) - ரூ.2,650- ரூ.2,900.
16. நெய் (டின் - 15 கிலோ) - ரூ.8,680 - ரூ.9,680.
17. நெய் (அட்டைப்பெட்டி- 1 லிட்டா்) - ரூ.530 - ரூ.575.
18. பிரிமியம் நெய் டின் - 1 லிட்டா்)- ரூ.585 - ரூ.630.
19. நெய் பாக்கெட் - 100 மிலி - ரூ.60 - ரூ.65.
20. நெய் பாக்கெட் - 15 மிலி - ரூ.10 - ரூ.12.
விலை உயராத பொருள்கள்: 5 கிராம் அளவுள்ள தயிா் பிரிமியம் கப் (ரூ.5), ப்ரோபயாடிக் கப் தயிா் 200 கிராம் (ரூ.25), பாக்கெட் லஸ்ஸி (ரூ.20) ஆகியவற்றின் விலைகள் உயரவில்லை.