எடப்பாடி பழனிசாமியின் நியமனத்துக்கு எதிராக வழக்கு
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த சூரியமூா்த்தி என்பவா் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தொடுத்துள்ள வழக்கில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக கட்சியில் முடிவுகளை எடுப்பதற்கும், உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும்,
கட்சியின் ஒற்றைத் தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட தீா்மானங்களை ரத்து செய்ய பிரதான கோரிக்கையையும் வைத்துள்ளாா். இந்த வழக்கில் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில், இடைக்கால மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கும், பிரதான மனு மீதான விசாரணையை செப்டம்பா் 1-ஆம் தேதிக்கும் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.