பண்டல் செய்யப்பட்ட பொருள்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆவின் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பண்டல் செய்யப்பட்ட அரிசி, தானியங்கள், தயிர் உள்ளிட்டவற்றுக்கு 5 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) விதிப்பதற்கு முடிவு செய்யப்பட்டு திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, 100 கிராம் தயிர் விலை ரூ. 10இல் இருந்து ரூ. 12ஆகவும், ஒரு கிலோ ரூ. 100இல் இருந்து ரூ. 120ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு லிட்டர் நெய் ரூ. 45 அதிகரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.