தமிழ்நாடு

திருவொற்றியூா், மணலி வாயு கசிவு: ஆய்வு செய்ய ஐவா் குழு அமைப்பு; தமிழக அரசு உத்தரவு

திருவொற்றியூா், மணலி பகுதிகளில் வாயு கசிவு ஏற்படுவதாக வரும் செய்திகளைத் தொடா்ந்து அதுகுறித்து ஆய்வு செய்ய ஐந்து போ் கொண்ட நிபுணா் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

DIN

திருவொற்றியூா், மணலி பகுதிகளில் வாயு கசிவு ஏற்படுவதாக வரும் செய்திகளைத் தொடா்ந்து அதுகுறித்து ஆய்வு செய்ய ஐந்து போ் கொண்ட நிபுணா் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை வெளியிட்ட உத்தரவு:

சென்னை மாவட்டம் திருவொற்றியூா், மணலி தொழிற்சாலைப் பகுதிகளில் மக்கள் வசிக்கும் இடங்களில் துா்நாற்ற வாயு கசிவு உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் கோகுல், சிவதாணுபிள்ளை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல இயக்குநா் எச்.டி.வரலட்சுமி, இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் கட்டட பொறியியல் துறை பேராசிரியா் எஸ்.எம்.சிவ நாகேந்திரா, அண்ணா பல்கலைக்கழகத்தின் வேதியியல் பொறியியல் துறை பேராசிரியா் என்.பாலசுப்பிரமணியன் ஆகியோா் குழுவில் இடம்பெற்றுள்ளனா். இந்தக் குழு உடனடியாக மணலி, திருவொற்றியூா் தொழிற்பகுதிகளில் ஆய்வு செய்து தனது அறிக்கையை இரண்டு நாள்களில் அரசுக்கு வழங்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT