தமிழ்நாடு

அதிமுக அலுவலகத்தில் விலைமதிப்புமிக்க பரிசுப் பொருள்களைக் காணவில்லை: இபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு

அதிமுக தலைமைக் கழகத்தில் வெள்ளி வேல், செங்கோல் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருள்களைக் காணவில்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். 

DIN

அதிமுக தலைமைக் கழகத்தில் வெள்ளி வேல், செங்கோல் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருள்களைக் காணவில்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். 

சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றபோது, ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகம் முன் கூடியிருந்த ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக மாறியது. இந்த மோதலில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 

இதைத் தொடா்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா். இதனை அகற்றக் கோரி ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அலுவலகத்தை திறக்க அனுமதித்து,  தலைமை அலுவலகத்தின் சாவியை உடனடியாக எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

அதன்படி, இன்று வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் அதிமுக அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு திறக்கப்பட்டது. அப்போது தலைமை அலுவலகத்தில் சேதமடைந்த இடங்களை முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்ட இபிஎஸ் தரப்பினர் பார்வையிட்டனர். 

அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருள்களைக் காணவில்லை, குறிப்பாக ஜெயலலிதாவின் செங்கோல், வெள்ளி வேல் ஆகியவற்றைக் காணவில்லை என சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து முறையாக எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்கப்பட்டு பின்னர்  அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. 

முன்னதாக, மோதல் நடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் எடுத்துச் சென்றதாக புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

விபத்தில் சிக்கியவா்களுக்கு முன்பணம் பெறாமல் அவசர சிகிச்சை

உள்ளாட்சித் தோ்தலில் வாக்குச் சீட்டுகள்: மாநில தோ்தல் ஆணையத்துக்கு அமைச்சரவை பரிந்துரை

கா்நாடகத்துக்கு புதிதாக ரூ. 12 லட்சம் கோடி முதலீடு

சாரண, சாரணியா்களுக்கான ஆளுநா் விருதுத் தோ்வு முகாம்

SCROLL FOR NEXT