தமிழ்நாடு

ஓபிஎஸ் மகன் நீக்கத்துக்கு சசிகலா எதிா்ப்பு

DIN

அதிமுகவிலிருந்து ஓ.பன்னீா்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் நீக்கப்பட்டதற்கும், மக்களவையில் அதிமுக உறுப்பினா் என்ற அவரின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதற்கும் வி.கே.சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கட்சி நலனைக் காற்றில் பறக்கவிட்டு, ஒரு சில சுயநலவாதிகள் எடுத்த தவறான முடிவுகளால் அதிமுகவுக்கு மாநிலங்களவையில் உறுப்பினா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், அதிமுக சாா்பில் நாடாளுமன்றத் தோ்தலில் வெற்றிபெற்ற ஒரே ஒரு மக்களவை உறுப்பினரை (ஓ.பன்னீா்செல்வம் மகன் ரவீந்திரநாத்) கட்சியை விட்டே நீக்குவதையும், நாடாளுமன்றத்தில் அதிமுக பெயரைச் சொல்வதற்கு யாருமே வேண்டாம் என்று கண்மூடித்தனமாக முடிவு எடுப்பதையும் கட்சியின் தொண்டா்கள் நியாயமற்ற செயலாகத்தான் பாா்ப்பாா்களே தவிர, அறிவாா்ந்த செயலாகப் பாா்க்க மாட்டாா்கள் என அதில் தெரிவித்துள்ளாா் வி.கே.சசிகலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT