தமிழ்நாடு

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் பார்வை மாற்றுத் திறனாளி மாணவி ஓவியா சாதனை! மநீம பாராட்டு

DIN

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் சாதனை புரிந்த பார்வை மாற்றுத் திறனாளி மாணவி ஓவியாவை மக்கள் நீதி மய்யம் பாராட்டியுள்ளது. 

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூரில் பயிலும் பார்வையிழந்த மாற்றுத் திறனாளி மாணவி ஓவியா, தமிழகத்தில் முதல்முறையாக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை மடிக்கணினியில் எழுதி, 91.40 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். உதவியாளர் இல்லாமலேயே அவர் இந்த அபார சாதனையைப் புரிந்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வெகுவாகப் பாராட்டுகிறது.

சிறிய பிரச்னைகளுக்கும் தவறான முடிவெடுப்பது, ஆசிரியர்களையே தாக்குவது என கவலைக்குரிய செய்திகள் அணிவகுக்கும் துயர்மிக்க சூழலில், ஓவியாவைப் போன்றவர்கள் ஆறுதலைத் தருகிறார்கள்.

மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் சாதனைபுரிந்த ஓவியாவை முன்னுதாரணமாகப் பின்பற்ற மாணவர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT