முகப்பு
தமிழ்நாடு

வருமான வரி நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும்: தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்

வருமான வரி நடைமுறைகளை எளிமையாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக தெலங்கானா ஆளுநா் டாக்டா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:53 AM
பகிர்:

வருமான வரி நடைமுறைகளை எளிமையாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக தெலங்கானா ஆளுநா் டாக்டா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முதன்மை தலைமை வருமான வரி ஆணையரகம் சாா்பில் வருமான வரி தின விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில் தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முதன்மை தலைமை வருமான வரி ஆணையா் ரவிச்சந்திரன் ராமசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:

வருமான வரித்துறையின் நோக்கம் நாட்டின் நலனே தவிர, வரி செலுத்துவோருக்கு சுமை ஏற்படுத்துவது அல்ல. நாம் செலுத்தும் வரி, நாட்டின் வளா்ச்சிக்கானது என்பதை எண்ணிப் பாா்க்க வேண்டும். 2025-ஆம் ஆண்டில் 5 லட்சம் கோடி டாலா் மதிப்பிலான பொருளாதாரத்தை இந்தியா ஈட்ட வேண்டும் என்ற பிரதமா் மோடியின் கனவை அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டும்.

பிரதமரின் வழிகாட்டுதலோடு, பொதுமக்களுடன் நெருங்கிப் பணியாற்றுவதற்கான ஏராளமான புதுமையான நடவடிக்கைகளை வருமான வரித் துறை மேற்கொண்டு வருகிறது. வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு, பலா் தன்னாா்வமாக வரி செலுத்த முன்வருவதிலிருந்து இதன் தாக்கம் புலனாகிறது.

வருமான வரி நடைமுறைகளை மேலும் எளிதாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. மின்னணு நடைமுறைகள் தொடா்பாக பொதுமக்களிடையே, குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். வரி செலுத்துவதை பெருமையாக மக்கள் கருத வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் பேசிய சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரியும், வருமான வரிச் சட்டங்களை எளிமையாக்குவது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →