முகப்பு
தமிழ்நாடு

செங்கல்பட்டு எல்லையம்மன் கோயிலில் 2 ஆவது வார ஆடி திருவிழா

செங்கல்பட்டு பகுதியில் உள்ள கோயில்களில் இரண்டாவது வார ஞாயிற்றுக்கிழமை ஆடி திருவிழா கூழ்வார்த்தல் விழாவும், ஆலயங்களில் சாமி ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
கங்கை அம்மன் கோயிலில் ஆடி திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற வீதி உலா .
பகிர்:

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதியில் உள்ள கோயில்களில் இரண்டாவது வார ஞாயிற்றுக்கிழமை ஆடி திருவிழா கூழ்வார்த்தல் விழாவும், ஆலயங்களில் சாமி ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

செங்கல்பட்டு அண்ணா நகர் 12 ஆவது தெருவில் உள்ள எல்லையம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழை கூழ்வார்த்தல் விழாவும் சாமி வீதி உலாவும் நடைபெற்றது. ஆடி திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜை நடைபெற்றது. கரக ஊர்வலம், அண்ணா நகர் முழுவதும் வலம் வந்து கோயிலை வந்தடைந்ததும் சிறப்பு பூஜைகளுடன் மதியம் கூழ்வார்க்கும் விழா மற்றும் அம்மனுக்கு கும்பம் போட்டு படைத்தல் நிகழ்ச்சிகள்  நடைபெற்றது.

திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் 

இதனை அடுத்து மாலை உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி புறப்பாடு நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் அண்ணா நகரைச் சேர்ந்த பெண்கள் செய்திருந்தனர்.

எல்லையம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடித் திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் அம்மனும், வீதி உலாவில் உற்சவ அம்மனும்.

இதே போன்று செங்கல்பட்டு முருகேசன் தெருவில் உள்ள கங்கை அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை அம்மன் புறப்பாடு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பகுதி பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதே போன்று அகழிக்கரையோரம் செங்கல்பட்டு  வீற்றிருக்கும் கடும்பாடி அம்மன் கோயிலில் மதியம் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் மாலை கும்பம் போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பூசாரி செய்திருந்தனர்.

தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் கூழ்வார்க்கும் நிகழ்ச்சியையொட்டி கோபூஜை

இதே போன்று திருவடிசூலம் கோயில் புரத்தில் உள்ள தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் கூழ்வார்க்கும் நிகழ்ச்சியையொட்டி கோபூஜை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனையை கோயில் ஸ்தாபகர் பு. மதுரை முத்து சுவாமிகள் திருகரங்களால் நடைபெற்றது. இதனை அடுத்து கூழ்வார்த்தலும் அம்மனுக்கு கும்ப படையலும் நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை முத்துசாமிகள் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →