முகப்பு
தமிழ்நாடு

முப்படைகளின் மரியாதையை ஏற்றார் திரெளபதி முர்மு

நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரெளபதி முர்மு முப்படைகளின் மரியாதையை ஏற்றார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:53 AM
பகிர்:

நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரெளபதி முர்மு முப்படைகளின் மரியாதையை ஏற்றார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்த திரெளபதி முர்முவுக்கு முப்படைகள் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. திறந்த வாகனத்தில் சென்ற குடியரசுத் தலைவர், படைகளின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →