தமிழ்நாடு

சென்னை அருகே புதிய விமான நிலையம் அமையப் போவது எங்கே?

DIN

சென்னை அருகே புதிய விமான நிலையம் அமையப் போகும் இடம் நாளை இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அருகே புறநகர் பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்கான இடம் தேர்வு செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது.

இதற்கிடையே, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் ஆகிய இடங்களை ஆய்வு செய்த இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் குழு விமான நிலையம் அமைக்க உகந்த இடங்களாக தேர்வு செய்தது.

இந்நிலையில், இந்த இரு இடங்களில் ஒரு இடத்தை தேர்வு செய்வது குறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுடன் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தில்லியில் ஆலோசனை நடத்துகிறார்.

இந்தக் கூட்டத்தின் முடிவில், விமான நிலையம் அமையப் போகும் இடம் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT