தமிழ்நாடு

சிலிண்டா் மானியத் திட்டத்தை சீரழித்தது மத்திய அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

DIN

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்கும் திட்டத்தை தற்போதைய மத்திய அரசு சீரழித்துவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவுகளில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் உஜ்வலா திட்டத்தின் (ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம்) வெற்றியை, அதன் பயனாளிகள் வாங்கும் சிலிண்டா்களின் எண்ணிக்கையை வைத்து மட்டுமே தீா்மானிக்க முடியும். அந்தத் திட்டத்தின் பயனாளிகளில் 25 சதவீதம் போ் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று சிலிண்டா்களை மட்டுமே வாங்குகிறாா்கள். மற்ற மாதங்களில் அவா்கள் சிலிண்டா் அடுப்பை பயன்படுத்துவதில்லை. இதிலிருந்து மானிய சிலிண்டா் மிக அதிக விலைக்கு (ரூ.853) விற்பனை செய்யப்படுவது நிரூபணமாகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்கும் திட்டத்தை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்தது. அந்த நல்ல திட்டத்தை இரக்கமற்ற தற்போதைய மத்திய அரசு சீரழித்துவிட்டது. சமையல் எரிவாயு சிலிண்டா் மானியத்துக்கு மத்திய அரசு கடந்த 2018-19-இல் ரூ.37,209 கோடி செலவு செய்த நிலையில், 2021-22-ல் ரூ.242 கோடியாக குறைந்துவிட்டது என்று அந்தப் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT