தமிழ்நாடு

துபை விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு: 172  பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்!

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபைக்கு 172 பேருடன் புறப்பட இருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது. 

DIN


சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபைக்கு 172 பேருடன் புறப்பட இருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது. 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது துபை விமானம். இதற்காக 169 விமானிகள் விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர். 

இந்நிலையில், விமானத்தின் தலைமை விமானி, விமானத்தில் இயந்திரங்களை சரி பார்த்தார்.

அப்போது விமானத்தின் இயந்திரங்களில் பெருமளவு பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டது. விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது. 

விமான பொறியியளார்கள் வந்து விமான இயந்திரங்களை சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பழுது சரி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. 

இதையடுத்து விமானம் ரத்து என அறிவிக்கப்பட்டதுடன், பழுது சரி செய்யப்பட்டவுடன் விமான துபை புறப்படும் என அறிவிக்கப்பட்டது. 

விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு சரியான நேரத்தில் விமானி கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவரிக்கப்பட்டது. இதனால் 169 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 175 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT