தமிழ்நாடு

விடுமுறை நாள்களில் வகுப்புகள் கூடாது: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை

பள்ளி நாள்கள் தவிர விடுமுறை நாள்களில் வகுப்புகள் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

DIN

பள்ளி நாள்கள் தவிர விடுமுறை நாள்களில் வகுப்புகள் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளைப் போல் அல்லாமல் வழக்கமான முறையில் பள்ளிகள் இயங்கப்படும் என்றும் அதுபோல சனிக்கிழமை வகுப்புகள் இயங்காது, விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

இந்நிலையில், சனிக்கிழமை சில பள்ளிகளில் வகுப்புகள் இயங்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து, பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. 

விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது, பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும் என்று கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT