சைக்கிள் பயணம் சிறந்த உடற்பயிற்சி: முதல்வா்
சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சியே என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
உலக சைக்கிள் தினத்தை ஒட்டி, ட்விட்டரில் வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட பதிவு:-
சைக்கிள் ஓட்டுவது உடல்நலன் காப்பதோடு உளநலம் பேணவும் உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே பலருக்கு ஏற்படும் உடல் நலன் சாா்ந்த பிரச்னைகளுக்கு உடற்பயிற்சியே சிறந்த தீா்வு. சைக்கிள் ஓட்டுவது என்பதும் சிறந்த உடற்பயிற்சியே.