தமிழ்நாடு

நடந்துநர்கள் இல்லாமல் பேருந்துநிலையத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகள்; பயணிகள் அவதி

DIN

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில், இன்று வெள்ளிக்கிழமை காலை புறப்பட இருந்த நான்கு அரசுப் பேருந்துகளுக்கு நடந்துநர்கள் இல்லாததால், பேருந்திநிலையத்திலேயே வெறுமெனே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், வெளியூர்களுக்கு செல்ல காத்திருந்த பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேருந்துநிலையத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 6.45 மற்றும் 7 மணிக்கு ஆத்தூர் புறப்பட வேண்டிய 11 மற்றும் 17 ஆம் எண் ஆகிய இரண்டு நகரபேருந்துகள் மற்றும், 7.30 க்கு கெங்கவல்லி வழியாக ஆத்தூருக்கும், 8.30 க்கு சேலம் -  துறையூருக்கு இயக்கப்பட வேண்டிய இரண்டு வெளியூர்களுக்கு இயக்குப்பட வேண்டிய பேருந்துகள் என, நான்கு பேருந்துகளுக்கும் இன்று நடத்துநர்கள் இல்லாததால், தம்மம்பட்டி பேருந்துநிலையத்தில் வெறுமெனே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதனால், ஆத்தூர், கெங்கவல்லி, சேலம், துறையூர் ஊர்களுக்கு செல்வதற்காக, தம்மம்பட்டி பேருந்துநிலையத்தில் காத்திருந்த பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT