தமிழ்நாடு

சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டில் முதன்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டம் சென்னையில் இன்று தொடங்கப்பட்டது. 

DIN

தமிழ்நாட்டில் முதன்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டம் சென்னையில் இன்று தொடங்கப்பட்டது. 

இத்திட்டத்தை சென்னை துறைமுகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரும் வகையில் இரண்டு நாள் சுற்றுலா திட்டமும், சென்னை துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரி சென்று பின்னர் மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் சுற்றுலா திட்டம் என இரண்டு பேக்கேஜ்களில் இந்த சொகுசு கப்பல் இயக்கப்படவுள்ளது. 

நாட்டின் பல துறைமுகங்களில் சேவை வழங்கி வரும் கோர்டிலியா என்ற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை செயல்படுத்துகிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று சுற்றுலாவை தொடங்கும் கப்பல், நாளை மறுநாள் மீண்டும் சென்னை திரும்புகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT