திருப்புவனத்தில் திமுக சார்பில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயம். 
தமிழ்நாடு

திருப்புவனத்தில் திமுக சார்பில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றிய நகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாக மாபெரும் மாட்டு வண்டிப் பந்தயம்  நடத்தப்பட்டது.

DIN


 
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றிய நகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாக மாபெரும் மாட்டு வண்டிப் பந்தயம் நடத்தப்பட்டது.

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன கொடியசைத்து மாட்டு வண்டிப் பந்தயத்ததை தொடங்கி வைத்தார். இப்போட்டி பெரியமாடு, சிறியமாடு பூஞ்சிட்டு மாடு என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டன. 

பந்தயம் தொடங்கி வைக்கப்பட்டதும் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன. பந்தயம் நடைபெற்ற சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் கூடிநின்று மாட்டு வண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர். 

மாட்டு வண்டிப் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கிய சட்டப்பேரவைஉறுப்பினர் தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், நகர் மன்றத் தலைவர் மாரியப்பன்ககென்னடி.

அதைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும் வண்டிகளை ஓட்டிச் சென்ற அதன் சாரதிகளுக்கும் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகர் மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி உள்ளிட்டோர் ரொக்கப் பரிசுகளை வழங்கினர்.  

பெரிய மாட்டு வண்டிப் பந்தயத்தில் முதல் பரிசாக மானாமதுரை நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி சார்பில் ரூ 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. திருப்புவனம ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT