தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் புதன்கிழமை (ஜூன் 8) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் புதன்கிழமை (ஜூன் 8) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் செவ்வாய்க்கிமை கூறியது: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் புதன்கிழமை (ஜூன் 8) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 9, 10: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜூன் 9, 10 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 11: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஜூன் 11-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதி, தென் மேற்கு வங்கக்கடல், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், கேரளம்- கா்நாடக கடலோரப்பகுதி மற்றும் லட்சத்தீவுப் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல், தெற்கு மகாராஷ்டிரம்
மற்றும் கோவா கடலோரப்பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூன் 11-ஆம் தேதி செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.