‘வெளியே செல்லுங்கள்’:ஓபிஎஸ்ஸுக்கு எதிராக பொதுக்குழு அரங்கில் முழக்கம் 
தமிழ்நாடு

‘வெளியே செல்லுங்கள்’:ஓபிஎஸ்ஸுக்கு எதிராக பொதுக்குழு அரங்கில் முழக்கம்

அதிமுக பொதுக்குழு அரங்கிற்குள் வந்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

DIN

அதிமுக பொதுக்குழு அரங்கிற்குள் வந்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவில் கடந்த சில தினங்களாக ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சைகள் தீவிரமடைந்து வருகின்றன. அதிமுக பொதுக்குழுவில் இதுதொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ்ஸின் நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் அதிமுகவின் அமைப்பு சட்டவிதிகளில் திருத்தம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு முக்கிய கவனம் பெற்றுள்ளது. ஒற்றைத் தலைமை சர்ச்சை தொடர்பாக ஓபிஎஸ்ஸுக்கும், இபிஎஸ்ஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் பொதுக்குழு அரங்கிற்கு ஓ.பன்னீர்செல்வம் முதலாவதாக வந்தார். அப்போது அரங்கில் இருந்தவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை வெளியே போகச் சொல்லி முழக்கங்களை எழுப்பினர். இதனால் அரங்கிற்குள் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்தார். மேலும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை எதிர்த்து துரோகி என முழக்கங்களை எழுப்பியதால் அவர் மேடையிலிருந்து கீழிறங்கினார். ஒற்றைத் தலைமை சர்ச்சைகளால் அதிமுக பொதுக்குழு அரங்கம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT