கோப்புப் படம் 
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.59.26 லட்சம் தங்கம் பறிமுதல்

கொழும்பிலிருந்து இருந்து சென்னைக்கும் விமானம் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.59.26 லட்சம் மதிப்புள்ள 1.275 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

DIN


கொழும்பிலிருந்து சென்னைக்கும் விமானம் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.59.26 லட்சம் மதிப்புள்ள 1.275 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், கொழும்பிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த ஃபாத்திமா ரிஃபாயா, ஃபாத்திமா நவியா, ஃபாத்திமா அஃப்ரா ஆகிய மூன்று பெண் பயணிகளை வழிமறித்து அவர்களின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். 

அப்போது 3 பயணிகளும் தங்களது உள்ளாடை மற்றும் ஹேர் பேண்டுகளில் பசை வடிவில் மறைத்து கடத்திவந்தது தெரியவந்தது.

இதையடுத்து மொத்தம் சுமார் 1.275 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.59.26 லட்சம் ஆகும்.

இந்த கடத்தல் தங்கம் தொடர்பாக ஃபாத்திமா ரிஃபாயா என்ற பயணி கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT