பேருந்து நடத்துநர், ஓட்டுநர்களுக்கு வசூல்படி உயர்வு
சாதாரணப் பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துநர்களின் வசூல்படி இரட்டிப்பாக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
சாதாரணப் பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துநர்களின் வசூல்படி இரட்டிப்பாக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசின் சாதாரண பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்யும் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், சாதாரண பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நடிகர் 'பூ' ராமு காலமானார்
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருடனான 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.